பொதுமக்கள் 'திடீர்' சாலைமறியல்

பாவூர்சத்திரம் அருகே பொதுமக்கள் ‘திடீர்’ சாலைமறியல் செய்தனர்.

Update: 2023-03-17 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூரில் ஒரு சமுதாயத்தைச் சார்ந்த முப்புடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதற்காக மேலப்பாவூர் ஊரின் நுழைவாயிலில் திருவிழா குறித்த விளம்பர பதாகை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த அந்த பதாகையை, இரவில் மர்ம நபர்கள் அகற்றி உள்ளனர். இதனை அறிந்ததும் நேற்று காலை அந்த சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு மேலப்பாவூரில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், சுரண்டை இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு பதாகை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து திருவிழா முடியும் வரை அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்