மின்தடையால் பொதுமக்கள் சாலை மறியல்
மின்தடையால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் உள்ள மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதால் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, ஜமாலியா நகர், மேற்கு நடுத்தெருவை தவிர மற்ற இடங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் லப்பைக்குடிக்காடு-அகரம்சீகூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.