வன்னிப்பேரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: ரூ.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்

வன்னிப்பேரில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.30 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

Update: 2023-06-22 18:45 GMT

பிரம்மதேசம், 

மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள வன்னிப்பேர் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது, இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு வருவாய் 274 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 6 ஆயிரத்து 82 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அரசானது மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தருவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை காக்கும் அரசாக தமிழ்நாடு அரசு விளங்குகிறது. எனவே, நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெற்றவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்வதோடு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், மரக்காணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தயாளன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷீலா தேவி சேரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பழனி, வன்னிப்பேர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் கஸ்தூரி, தனித்துனை ஆட்சியர் விஸ்வநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அன்பழகன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சேரன், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்