திருட்டை தடுக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

தோகைமலை அருகே திருட்டை தடுக்கக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-06-21 18:39 GMT

தொடர் திருட்டு

தோகைமலை அருகே உள்ள காக்காயம்பட்டி 4 ரோடு மோலப்புடையானூர் பகுதியில் கடந்த 3 மாதமாக அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளை திருட வந்தவர்கள் பொதுமக்கள் துரத்தினர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை எடுக்க 4 பேர் வந்துள்ளனர். இதை கண்காணித்து வந்த காக்காயம்பட்டி 4 ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் 4 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து தோகைமலை போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். இதையடுத்து போலீசார் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல முற்பட்டனர்.

சாலைமறியல்

அப்போது அப்பகுதி பொதுமக்கள் எங்கள் பகுதியில் திருட்டு போன மோட்டார் சைக்கிள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து தர வேண்டும், தொடர் திருட்டை தடுக்க கோரியும் கொசூர்-போத்துராவுத்தன்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், குளித்தலை துணை போலீஸ் ஸ்ரீதர், தோகைமலை இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது, உங்கள் பகுதியில் திருட்டு நடைபெற்று, போலீசில் புகார் அளித்து இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுத்து, திருடர்களை கண்டுபிடித்து உங்கள் பொருட்கள் மீட்டுத்தரப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலைமறியலால் கொசூர்-போத்துராவுத்தன்பட்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரையும் தோகைமலை போலீசார் விசாரணைக்காக அங்கிருந்து அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்