ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

விருத்தாசலம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-13 18:51 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே ஊ.கொளப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு அத்தியாவசிய பொருட்கள் சரிவர வரவில்லை என்று கூறி விற்பனையாளர், நேற்று கடைக்கு வந்த பொதுமக்களுக்கு பொருட்களை சரியாக வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் விற்பனையாளர் ரேஷன் கடையை பூட்டிவிட்டு பொருட்கள் வழங்க முடியாது என கூறியுள்ளார். இதன் காரணமாக பொதுமக்கள், ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்