கோவில்களில் பொது விருந்து

தென்காசி, குற்றாலம் கோவில்களில் பொது விருந்து நடந்தது.

Update: 2022-08-15 17:28 GMT

சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் செய்திருந்தார். இதேபோன்று குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கண்ணதாசன் செய்திருந்தார்.

இலஞ்சி குமாரர் கோவிலில் நடைபெற்ற பொது விருந்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுசிலா ராணி செய்திருந்தார். இந்த மூன்று கோவில்களிலும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்