தஞ்சை மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சை 14-வது வார்டில் சாக்கடை வாய்க்கால் 6 மாதத்தில் கட்டித்தரப்படும் என்று மேயர் சண்.ராமநாதன் உறுதி அளித்தார்.

Update: 2022-10-06 20:41 GMT

தஞ்சை கீழவாசல் பகுதியில் 14-வது வார்டில் உள்ளது படைவெட்டியம்மன் கோவில் தெரு. இந்த பகுதியில் 15-வது நிதிக்குழு மூலம் ரூ.4 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து சுகாதார வளாகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மண்டலக்குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.

பொதுமக்களிடம் உறுதி

பின்னர் மேயர், அங்கு இருந்த பொதுமக்களிடம், 14-வது வார்டில் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சுகாதார வளாகம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. வேறு என்ன வசதிகள் தேவை? என கேட்டார். அதற்கு பொதுமக்கள் இந்த பகுதியில் சாக்கடை வாய்க்கால் முறையாக செல்ல வழி இல்லாமல் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது.

எனவே சாக்கடை வாய்க்காலை சீர் செய்து புதிதாக கட்டித்தர வேண்டும். சாலை வசதிகளை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவற்றை கேட்டறிந்த மேயர் சண்.ராமநாதன், 6 மாதத்துக்குள் சாக்கடை வாய்க்கால் கட்டித்தருவதோடு, சாலைகளும் சீர் செய்து தரப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார். அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், கவுன்சிலர் பாப்பா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்