வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திருவள்ளூர் பகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2023-10-12 14:29 GMT

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவள்ளூர் நகராட்சி பெரியகுப்பம் பகுதியில் உள்ள பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு அந்த சுற்றுவட்டார மக்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்து அரசு ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ஜெயராஜ பௌலின், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட்வேர்ட் ஆகியோர் கலந்து கொண்டு எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்யப்பட்டதை பார்வையிட்டனர்.

மேலும் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாதிரி வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வேர்ட் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்