கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்

கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என பூசாரிகள் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-06-23 17:33 GMT

வாய்மேடு:

கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என பூசாரிகள் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

ஆலோசனை கூட்டம்

வாய்மேடு மேற்கு பின்னையடி மாரியம்மன் கோவிலில் பூசாரிகள் பேரமைப்பு ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் காளிதாஸ் வரவேற்றார்.

மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். ஒன்றிய துணைத்தலைவர் சிங்காரவேல், நகர தலைவர் ரத்தினம், நகர செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பூரண மதுவிலக்கு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதுபோல் கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரியின் மறைவுக்குப்பின் அவருடைய மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் ேததி வேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டில் திரளானோர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செய்தி தொடர்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்