பக்தர்கள் திடீர் போராட்டம்

பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-20 15:38 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக வந்து அதன் பின்னர் மூன்றாம் பிரகாரத்தின் மைய பகுதி வழியாக சாமியை தரிசனம் செல்வது வழக்கம். கூட்டம் அதிகமாக இருக்கும்போது மூன்றாம் பிரகாரத்தில் இருபுறமும் பக்தர்கள் சாமி சன்னதி பிரகாரத்திற்குள் அனுப்பப்படுவார்கள். மேலும் திருக்கோவில் அலுவலகத்தில் சிறப்பு பாஸ் வாங்கி வருபவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளூர் பக்தர்கள் மூன்றாம் பிரகாரத்தின் மையப்பகுதி வழியாகவே கோவிலுக்குள் தரிசனம் செய்ய வழக்கமாக அனுப்பப்படுவார்கள். இந்த நிலையில் ராமேசுவரம் கோவில் மூன்றாம் பிரகாரத்தின் மையப்பகுதி வழியாக சிறப்பு பாஸ் பெற்று வருபவர்கள் உள்ளிட்ட உள்ளூர் பக்தர்கள் யாரும் அந்த பாதை வழியாக பக்தர்கள் செல்வதை தடுக்கும் வகையில் இரும்புகளால் ஆன கதவுகள் அமைத்து மூடப்பட்டு இருந்தது. இதனிடையே மூன்றாம் பிரகாரத்தின் மைய பகுதியில் மூடப்பட்டு இருந்த அந்த கதவை உடனடியாக திறக்க வலியுறுத்தி மையபகுதி வழியாக வழக்கம்போல் உள்ளூர் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கண்இளங்கோ உள்ளிட்ட ஒரு சில கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பக்தர்கள் மூன்றாம் பிரகாரத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி திருக்கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் பேசி அந்த கதவை திறந்து விட்டனர். அதன் பின்னர் வழக்கம்போல் பக்தர்கள் மையப்பத்தி வழியாக தரிசனம் செய்ய சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்