மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது
மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்கள் மற்றும் ஐ.டி.ஜ. படித்தவர்களை காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேண்டும். அனைத்து மின் ஊழியர்களுக்கு பணப்பயன்களை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், சங்க திட்ட செயலாளர் ராஜேந்திரன், கோட்ட செயலாளர்கள் வினோத், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட பொருளாளர் முகேஷ் நன்றி கூறினார்.