கல்லிடைக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
கல்லிடைக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பை:
மணிப்பூர் மாநில கலவரத்தில் நடைபெறும் மனித உரிமை மீறலை கண்டித்து கல்லிடைக்குறிச்சியில் முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அப்துல் மஜீது தலைமை தாங்கினார். தைக்கா தெரு ஜமாத் தலைவர் நாகூர்கனி, சத்திரம் தெரு ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இமாம்கள் அஹமது மைதீன், முஸம்மில், அசன், கிறிஸ்தவ பாதிரியார் அருள் அந்தோனி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகி ஜோயல் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் எஸ்.டி.பி.ஐ. புறநகர் மாவட்ட செயலாளர் சுலைமான், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் அனிபா, சேக்மைதீன், ம.தி.மு.க. நகர செயலாளர் மசூது மற்றும் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், எஸ்.டி.பி.ஐ., விமன்ஸ் இந்தியா கட்சிகளின் நிர்வாகிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து ெகாண்டனர். முடிவில், அமீன் நன்றி கூறினார்.