பாதையில் மரத்தை வெட்டிப்போட்டு போராட்டம்
பாதையில் மரத்தை வெட்டிப்போட்டு போராட்டம் நடைபெற்றது.
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த கல்பாளையத்தான்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும், மற்றொரு தரப்பை சேர்ந்த 3 பேருக்கும் பாதை பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று பிரச்சினை ஏற்பட்டதால், ஒரு தரப்பினர் பாதையில் முள் மரத்தை வெட்டிப்போட்டு, பாதை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.