சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் ரூ.6,750 மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தங்கராசு வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு, சத்துணவு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.