நாமக்கல்லில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-09-12 17:40 GMT

குஜராத் மாநிலத்தில் கர்ப்பிணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை அந்த மாநில அரசு சமீபத்தில் விடுதலை செய்தது. இதை கண்டித்து நேற்று தமிழ்ப்புலிகள் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் உமா மகேஸ்வரன் வரவேற்று பேசினார். மத்திய மாவட்ட செயலாளர் கோபி முன்னிலை வகித்தார். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ரகுமத்துல்லா, தமிழ்ப்புலிகள் கட்சியின் நிர்வாகிகள் செந்தமிழன், அறிவழகன், சிவா, அறிவு தமிழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்