நாமக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டதை கண்டித்தும், மீண்டும் பழையபடி 3 ஆண்டுகளாக குறைக்க வலியுறுத்தியும் நேற்று தமிழகத்தில் போக்குவரத்து பணிமனைகள் முன்பு சி.ஐ.டி.யு. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. கிளை தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மண்டல பொருளாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.