பாடை கட்டி நூதன போராட்டம்

பாடை கட்டி நூதன போராட்டம் நடந்தது.

Update: 2022-06-28 17:55 GMT

பேரளம் - அன்னியூர் இடையேயான தார்ச்சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த நிலையில் அங்கு சாலையை சீரமைக்கக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பாடை கட்டி ஊர்வலமாக சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பாலா தலைமை தாங்கினார். ஊர்வலத்தை தொடர்ந்து திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள பேரளத்தில் பாடையை வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்