கன்னிவாடியில் வனச்சரக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கன்னிவாடியில் வனச்சரக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-06-08 20:08 GMT

தருமத்துப்பட்டி, கோம்பை ஆகிய கிராமங்களில் உள்ள தோட்டங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. மேலும் அப்பகுதி மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் கன்னிவாடி வனச்சரக அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து வனச்சரகர் சக்திவேல் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காட்டுயானைகளை மேல்மலைக்கு விரட்டிவிடுவதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்