தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-31 18:14 GMT

மன்னார்குடி, ஜூன்.1-

சாதி பெயரில் நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட பொருளாளர் பிச்சைக்கண்ணு, மன்னார்குடி கிளை தலைவர் ஏசுதாஸ், கிளை பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

---

Tags:    

மேலும் செய்திகள்