தர்மபுரியில்கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Update: 2023-08-24 19:00 GMT

தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்க பொதுச்செயலாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட வணிக வங்கிகள் சங்க தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் சரவணன், அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பழனியம்மாள், நகர வங்கி பொதுச் செயலாளர் செந்தில் வேலவன், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பணியாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், நிர்வாகிகள் பெரியசாமி, தர்மலிங்கம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் 32 மாத காலமாக ஏற்பட்டுள்ள காலதாமதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 20 சதவீதத்திற்கும் குறையாமல் ஊதிய உயர்வு வழங்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே பதவியில் 12 ஆண்டுகள் பணியாற்றும் போது வழங்கப்படும் ஊதிய உயர்வை இனிமேல் 7 ஆண்டுகள் என்று நிர்ணயம் செய்ய வேண்டும். கூட்டுறவுத்துறை வங்கி பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியமாக குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கூட்டுறவு வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்