குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்புவி.மேட்டூர் பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட வி.மேட்டூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் சிலரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகேசனை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்பு வி.மேட்டூரை சேர்ந்த பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.