குமாரபாளையத்தில்பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-24 19:00 GMT

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் உள்ள 33 வார்டு பகுதிகளிலும் பா.ஜனதா கட்சி சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தினசரி காய்கறி மார்க்கெட் எதிரில் நடந்த ஆர்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் சரவணராஜன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் சரவணன், வக்கீல் தங்கவேல், ராஜா, ஆவின் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் குமாரபாளையம் அருகே சாணார் பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் என்ஜினீயர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் கீர்த்தி பரமன், தகவல் மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் விவேக் பாலாஜி, ராஜா, திருமதி. பஞ்சவர்னம் உள்பட கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்