தர்மபுரியில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-08 19:00 GMT

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைக்க அளிக்கப்பட்ட மனுவை நிராகரித்ததை கண்டித்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரியில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தீர்த்தராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வடிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், கிருஷ்ணன், மகளிர் அணி மாவட்ட தலைவர் காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வேடியப்பன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், காமராஜ், ஞானசேகர், மணி, வெங்கடாசலம், சிலம்பரசன், சிறுபான்மை அணி தலைவர் முபாரக், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி சென்னகேசவன். நகர தலைவர்கள் முருகன், தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் சதீஸ், முனிரத்னம், சேகர், காளியப்பன், பழனி, நட்ராஜ், லோகு மற்றும் கட்சிதொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்