அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்...! பெண் கைது

சென்னையில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-20 02:47 GMT

ஆவடி,

சென்னை கொரட்டூர் பகுதியில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலின் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் விபசார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் குமார், ரமேஷ், தலைமை காவலர் செந்தில்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று மாலை கொரட்டூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கொரட்டூர், 30-வது தெரு, மத்திய அவென்யூ பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர். அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்து வந்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஷீஜா (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்த அடைத்து வைத்து இருந்த 2 இளம்பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அதேபோல் அம்பத்தூர் அடுத்த புதூர் அபிராமபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய நெல்லையைச் சேர்ந்த ரமேஷ் (42) மற்றும் தினேஷ்குமார் (22) ஆகியோரை கைது செய்த போலீசார், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஐதராபாத், பெங்களூரு பகுதியை சேர்ந்த 3 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்