முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு - தமிழ்நாடு அரசு அரசாணை

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-13 04:44 GMT

சென்னை,

கடந்த மாதம் 19ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முன்னாள் ராணுவ வீரர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்