சொத்து குவிப்பு வழக்கு - ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-31 06:24 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. 2001-2006 அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து 2012-ல் சிவகங்கை நீதிமன்றத்தால் ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இது தொடர்பாக பதில் அளிக்க ஓ. பன்னீர் செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம். அதிகார வரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு வழக்கை ஐகோர்ட்டு மாற்றியுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சினைகள் உள்ளன" என தனது வேதனையை தெரிவித்துள்ளார். இதேபோல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்