மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில்4 சதவீத இட ஒதுக்கீடு
அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
சிவகங்கை மாவட்ட அனைத்து துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரியக்குழு உறுப்பினர் புஷ்பராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவராக சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளராக திருமுருகன். மாவட்ட பொருளாளராக வெங்கடேசன், கவுரவ தலைவராக அரியக்குமார், துணை தலைவர்களாக மாயாண்டி, சரவணன், துணை செயலாளர் பூமிராஜ், இணை செயலாளராக பாற்கடல் பலராமன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
4 சதவீத இடஒதுக்கீடு
பின்னர் நடந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசுப்பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும். கட்டாய மாறுதலில் இருந்து விலக்கு அளிக்கவும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் சாய்தளம் அமைத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.