ஆன்லைன் ரம்மிக்கு தடை? - தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச்சட்டம் இயற்றுவது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Update: 2022-07-30 09:41 GMT

சென்னை,

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச்சட்டம் இயற்றுவது குறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் சென்னையில் தலைமைச்செயலகத்தில் உள்ள 2-வது தளத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

தலைமை செயலாளர் இறையன்பு தலைமை தாங்கும் இந்த கூட்டத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு, சட்டத்துறை செயலர், சைபர் கிரைமை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசரச்சட்டம் எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்து இந்த ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, தமிழக அரசு சார்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி 701 பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக முதல் அமைச்சரிடம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசரச்சட்டத்தில் இடம்பெற வேண்டிய பரிந்துரைகள் என்ன?, மேலும் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டால் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இறுதியாக தமிழக முதல் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிகாரப்பூர்வ அவசரச்சட்டம் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்