ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக, சில வாரங்களுக்கு முன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடும் மூச்சு திணறலும் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று சரியான நிலையில், சில நாட்களுக்கு முன் சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். கொரோனாவில் இருந்து அவர் மீண்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இளங்கோவனுக்கு கடந்த 26-ம் தேதி மீண்டும் மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஐசியு பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் நுரையீரல் தொற்று மற்றும் இருதய செயலிழப்பில் இருந்து குணமடைந்து வருவதாகவும் ஐசியூ பிரிவில் இளங்கோவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
#JUSTIN || ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம்
— Thanthi TV (@ThanthiTV) March 30, 2023
* நுரையீரல் தொற்று மற்றும் இருதய செயலிழப்பில் இருந்து குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை #evksilangovan | #dmk | #healthupdate pic.twitter.com/1wXCFNW3iN