ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-07-25 19:26 GMT

பெரம்பலூரில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெரம்பலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கற்பிக்கும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாடு குறித்த 3 நாள் பயிற்சி முகாம், பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஸ்ரீரங்கன் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேசிய அடைவுத்திறனில் மாணவர்களின் அடைவுத்திறன் குறைவாக உள்ளதால், மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் கற்றல் விளைவுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கருத்தாளர்களாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களின் முழுமையான திறன் வெளிப்படும் வகையில் வினா அமைப்பு குறித்து மாற்றம் ஏற்படுத்தும் முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் அடைய வேண்டிய கற்றல் திறன் குறித்து கலந்துரையாடப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுனர்கள் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்