மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-11-19 18:45 GMT

காளையார்கோவில், 

காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை தாங்கினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி வரவேற்றார். ஊர்வலத்தில் ஆசிரியர்கள் மீனாட்சி, ராஜபாண்டி, அமலாதீபா மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை கமலாபாய் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்