காரிமங்கலம் பேரூராட்சியில் விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-07-24 19:30 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் பேரூராட்சியில் தூய்மைப்பணிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் ஆயிஷா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரிமங்கலம் பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் கடைவீதி ராமசாமி கோவில் வழியாக சென்று பழைய பேரூராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. ஊர்வலத்தில் என் குப்பை என் பொறுப்பு என்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் குப்பைகளை சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாயில் கொட்டுவதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். வணிக நிறுவனங்கள் ஓட்டல்கள் ஆகியவற்றில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மாதப்பன், சுரேந்திரன், ரமேஷ், சக்தி, கீதாமுத்துசெல்வம், இந்திராணி ராமச்சந்திரன், ராதாராஜா, சிவகுமார், பிரியாசங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்