மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Update: 2022-12-04 18:45 GMT

வால்பாறை

வால்பாறை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார வளமைய அலுவலகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு புத்துணர்வு ஏற்படும் வகையிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு வட்டார வளமைய அலுவலகத்தில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டது.

விழாவிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சிவன்ராஜ் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் சுகந்தி, பிரபா, ரவிச்சந்திரன், தேன்மொழி, ரம்யா, முத்துமாரி, சுமித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்