கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-02-07 19:10 GMT

இட்டமொழி:

ராதாபுரம் மேற்கு ஒன்றியம் விஜயாபதியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கபடி போட்டி நடைபெற்றது. இதில் 40 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டியில் பணகுடி அணி முதல் இடமும், கூடங்குளம் சுபாஷ் அணி 2-வது இடமும், சென்னை ராயல் அணி 3-வது இடமும், கூடங்குளம் கூடல் 'ஏ' அணி 4-வது இடமும் பிடித்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். ஞானதிரவியம் எம்.பி. வாழ்த்தி பேசினார்.

விழாவில் மாவட்ட அவைத்தலைவர் ம.கிரகாம்பெல், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திசையன்விளை ஜான் ரபீந்தர், துணை அமைப்பாளர்கள் எல்.வேல்முருகன், என்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தி.மு.க. இளைஞரணி நிர்வாகி ஏ.ஆர்.ரகுமான் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்