சுற்றுச்சுவர் மீது மோதியதனியார் பஸ்; டிரைவர் காயம்

சுற்றுச்சுவர் மீது மோதிய தனியார் பஸ் காரணமாக டிரைவர் காயம் அடைந்தார்.

Update: 2023-07-26 20:04 GMT

பேட்டை:

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன், பேட்டை வழியாக பாபநாசத்திற்கு தனியார் பஸ் புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ்சை சாத்தான்குளத்தை சேர்ந்த கோட்டியப்பன் (வயது 45) என்பவர் ஓட்டினார்.

பேட்டை-சேரன்மாதேவி மெயின் ரோட்டில் வந்த போது, டிரைவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் நிலைதடுமாறி மெயின் ரோட்டை விட்டு கீழே இறங்கி சாலையோரத்தில் இருந்த தனியார் நிறுவன சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது. இதில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். காயம் அடைந்த டிரைவர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்