முழு கொள்ளளவை எட்டிய பிரிதிவிமங்கலம் பெரிய ஏரி

தொடர் மழையால் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய பிரிதிவிமங்கலம் பெரிய ஏரி பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2022-10-22 18:45 GMT

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி கடந்த 2011-ம் ஆண்டு பெய்த அடைமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம் பெய்த கன மழையால் முழு கொள்ளளவை எட்டியது. இதைத் தொடர்ந்து தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக 2-வது முறையாக இந்த மாதமும் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரி நிரம்பி பாசனத்துக்கு தண்ணீர் வெளியேறும் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தட்சிணாமூர்த்தி மற்றும் கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்