பூசாரிகளுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும்

பூசாரிகளுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-03-30 17:47 GMT

ராணிப்பேட்டை மாவட்ட பூசாரிகள் நல சங்க கூட்டம் வாலாஜா படவேட்டம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த 60 வயது நிரம்பிய பூசாரிகளுக்கு ஓய்வு ஊதிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களில் கையொப்பங்கள் பெற்ற பின்னர் விரைவில் அவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் வழங்கவும், அவர்களுக்கு ஓய்வு ஊதியம் கிடைக்கவும் பரிந்துரை செய்யப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் பூசாரி நல வாரியத்தில் உறுப்பினராக ஏற்கனவே ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு அதற்கான அடையாள அட்டை உடனடியாக வழங்கிட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்