2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
சென்னை வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
சென்னை,
நாளை நடைபெறும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார். இதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார்.
சென்னை வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார்.
இன்று கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் ஜனாதிபதி, நாளை காலை 10 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.