தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள்-கலெக்டர்கள் ஆய்வு

மேலமாத்தூரில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறவுள்ள தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-06-22 19:32 GMT

பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், அந்த மாவட்டங்களில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அதற்காக அந்த பள்ளியில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர்கள் ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்), ரமணசரஸ்வதி (அரியலூர்) ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் வரை இந்த முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். அனுமதி இலவசம் என்பதால் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட இளைஞர்கள், வேலை நாடுனர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றனர். ஆய்வின் போது, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை திருச்சி மண்டல இணை இயக்குனர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்