ஒரத்தநாடு;
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பூவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவருடைய மனைவி துர்காதேவி (வயது31) இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. துர்காதேவி தற்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்து வந்தார். கடந்த 1 வாரமாக துர்கா தேவி கீழவன்னிப்பட்டு கிராமத்திலுள்ள தனது தந்தை வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் துர்காதேவிக்கு நேற்று முன்தினம் இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை உறவினர்கள் ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த துர்காதேவிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால், அவரது இறப்பில் மர்மம் உள்ளதா என தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் விசாரணை நடத்தி வருகிறார்.