தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சாம்பல் புதன்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Update: 2023-02-22 18:45 GMT

சாம்பல் புதன்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சாம்பல் புதன்கிழமை

கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. அதாவது இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் விதமாக இந்த தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

இந்த தவக்காலத்தின் ஆரம்ப நாள் சாம்பல் புதன், திருநீறு புதன் என அழைக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் மாதம் 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையான நேற்று தொடங்கியது.

சிறப்பு பிரார்த்தனை

அதன்படி, நேற்று கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை தேவாலயத்தில் சாம்பல் புதன்கிழமையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து பங்குதந்தை இசையாஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்களுக்கு நெற்றியில் பங்குதந்தை இசையாஸ் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டார். அப்போது தீய பழக்கங்களை களைவதற்கு இந்த தவ நாட்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல் ஓசூர், சுண்டம்பட்டி, எலத்தகிரி, புஷ்பகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன்கிழமையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்