சிவன் கோவில்களில் பிரதோஷ விழா

பரமத்திவேலூர் வட்டாரத்தில் சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றது.

Update: 2022-09-08 17:16 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்