மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்
மானாமதுரையில் 11-ந்தேதி மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. அதன்படி அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மானாமதுரையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் நடக்கிறது. எனவே மானாமதுரை கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின் வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.