மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
காட்பாடியில் மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வேலூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் காட்பாடியில் மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
அக்சீலியம் கல்லூரி அருகே தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் தனபாக்கியம் கல்யாண மண்டபம், ஓடை பிள்ளையார் கோவில் சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது.
வேலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சாந்தி, காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் பரிமளா உள்பட பலர் கலந்து கொண்டனர். மின்சார ஊழியர்கள் மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.