பல்கலைக்கழகம், நீர்பழனி, வயலோகம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
பல்கலைக்கழகம், நீர்பழனி, வயலோகம் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
குளத்தூர் தாலுகா தொண்டைமான் நல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெரும் தொண்டைமான்நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், தென்னதிரையான்பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கீரனூர் மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்து உள்ளார்.
இதேபோல் அண்ணா பண்ணை துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் வயலோகம், மாங்குடி, மண்வேளாம்பட்டி, அண்ணா பண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூர் மற்றும் காரசூரான்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது என இலுப்பூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து தெரிவித்துள்ளார்.