பாபநாசம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
பாபநாசம் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம்:
பாபநாசம் உதவி மின்வாரிய செயற்பொறியாளர். கே.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாபநாசம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவடை, இனாம்கிளியூர், நல்லூர், ஆவூர், ஏரி, கோவிந்தகுடி முழால்வாஞ்சேரி, ஏரி, காருகுடி, சாலபோகம், உத்தமதானாபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூர், மட்டையாந்திடல், வீரமங்கலம், இடையிருப்பு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.பொதுமக்கள் மின்தடை குறித்து விவரங்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
---