இன்று மின்சாரம் நிறுத்தம்

பெரியகுளம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-11-18 19:00 GMT

பெரியகுளம் மின்கோட்ட பராமரிப்பில் உள்ள பெரியகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியகுளம் நகர், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இத்தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பால பூமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்