பாணாவரம் பகுதிகளில் இன்றும், நாளையும் மின் நிறுத்தம்

பாணாவரம் பகுதிகளில் இன்றும், நாளையும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-11-28 18:33 GMT

சோளிங்கர் கோட்டத்தை சேர்ந்த பாணாவரம் துணை மின் நிலைய, மின்பாதையில் உள்ள கம்பங்களை சென்னை- பெங்களூரு அதிவிரைவு சாலை பணியினரால் மாற்றி அமைக்க இருப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பாணாவரம், ரங்காபுரம், வெங்கடேஸ்வரா நகர் மற்றும் மாங்குப்பம் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல, மங்களம் மின்பாதையில் உள்ள கம்பங்களை சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை பணியினால் மாற்றி அமைக்க இருப்பதால் நாளை (புதன்கிழமை) மேல்வீராணம், கோவிந்தசேரி, மங்களம் மற்றும் பொன்னப்பதாங்கல் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் உமாசந்திரா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்