ஆம்பூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

ஆம்பூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-01 18:00 GMT

ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சோமலாபுரம், ஆம்பூர் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம், ராலகொத்தூர், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தார்வழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதர்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி. ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், வடகாத்திப்பட்டி, மாதனூர், அகரம்சேரி, பாலூர், பள்ளிக்குப்பம், கொல்லமங்கலம், கோவிந்த பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளர் எஸ். விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்