தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9 ஆயிரம் டன் ஆகும். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி அவ்வப்போது நிறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1, 2, 3, 4, 5 ஆகிய ஐந்து அலகுகளில் இன்று அதிகாலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 5 யூனிட்டுகளில் மொத்தம் 1050 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அனல் மின் நிலையத்தில் போதுமான அளவே நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.